நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்க இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டாலே போதுமாம்! என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
1445Shares

இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நோய்கள் நம்மை எளிதில் வந்து தாக்க காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுகளே.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், சக்கரை நிறைந்த பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற நோய்களை தானே உருவாக்கும் உணவுகளை தான் இன்று நாம் தேடி தேடி உண்ணுகின்றோம்.

இதனால் முதலில் பாதிப்படைவத நமது நோய் எதிர்ப்பு சக்தியே. தற்போதைய சூழ்நிலையினால் ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளாம்.

ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வண்ணமயமான மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்துக்க நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு வரிசையில் பொட்டுக்கடலையும் ஒன்றாகும். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரிகின்றது என்று கருதப்படுகின்றது.

ஏனெனில் இதில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.

பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று என இதை கூறலாம். அதிலும் அதனுடம் வெல்லம் சேர்த்து சாப்பிட்டலாம் இன்னும் பல மடங்கு உடலுக்கு சக்தியை தருகின்றது.

வெல்லத்தில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது. இவை இரண்டு சேரும் போது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.

அந்தவகையில் பொட்டுக்கடலையுடன் வெல்லததை எப்படி சேர்த்து சாப்பிடலாம்? இப்படி சாப்பிடுவதனால் கிடைக்கும் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்.

timesofindia
எப்போது சாப்பிடுவது நல்லது?

பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

வேண்டுமானால், இவற்றைக் கொண்டு லட்டு தயாரித்து தினமும் ஒரு உருண்டை சாப்பிடலாம்.

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கும் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை சாப்பிட கொடுக்க மறவாதீர்கள்.

வேறு என்ன நன்மைகள் கிடைக்கும்?
  • வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜிங்க் அதிகம் உள்ளதால் உடலினுள் 300 நொதிகளை செயல்படுத்தக்கூடியது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
  • இந்த உணவுக் கலவை சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் இரவு தூங்கும் முன், சிறிது பொட்டுக்கடலையை, வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
  • தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதனால் நுரையீரல் சுத்தமாகி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அப்பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.
  • இந்த உணவுக் கலவை சொத்தைப் பற்களைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்