ஆண்களே! மலட்டுத்தன்மை போக்கி தாதுவிருத்தி அதிகரிக்க செய்யனுமாா? இந்த மூலிகைகள் மட்டுமே போதுமே!

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆண்கள் வெளியே சொல்லத் தயங்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனை தான் ஆண் மலட்டுத்தன்மையும் ஒன்றாகும்.

பொதுவாக இந்த பிரச்சனையை 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சந்திப்பார்கள். இந்த பிரச்சனை உள்ள ஆண்கள் மிகுந்த மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.

ஒரு ஆணுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் மாற்றங்கள், வயது போன்றவை முக்கிய 2 காரணிகளாகும். இதோடு உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்றவைகள் உடலில் இரத்த நாளங்களைக் குறுகச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்கும்.

மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம், பதட்டம் போன்றவைகளும் ஒரு ஆணின் பாலியல் வாழ்க்கைக்கு பாதிப்பை உண்டாக்கும்.

இதிலிருந்து விடுபட சில மூலிகை பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கானாம் வாழை இலை அரைகைப்பிடியுடன், முருங்கை பூ மொக்கை சம அளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு சட்டியில் வேக வைக்கவும். அதை இறக்கி வடிகட்டினால் கால் டம்ளர் அளவு சாறு கிடைக்கும். இதை சுண்ட காய்ச்சிய பசும்பாலில் நாட்டு சர்க்கரை கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் இதை குடித்து வந்தால் தாது கெட்டிப்படும். இயல்பாகவே வாரம் ஒருமுறை ஆண்களுக்கு கொடுத்து வரலாம்.

  • ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய் போன்றவற்றை சம அளவு எடுத்து சிறு உரலில் இட்டு நன்றாக தூளாக்கி இடித்து சல்லடையில் சலிக்கவும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இரண்டு சிட்டிகை தூளை சுண்ட காய்ச்சிய பசும்பாலில் கலந்து 40 நாட்கள் வரை குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண்மலட்டுத்தன்மை வராமல் செய்யும். திருமணம் முடிந்ததும் ஆண்களுக்கு பாலில் இந்த பொடி கலந்து கொடுக்கலாம்.

  • துளசி செடியின் வேரை பறித்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய விடவேண்டும். நன்றாக காய்ந்ததும் மைய பொடித்து சலித்து வைக்கவும். வெற்றிலையுடன் மூன்று சிட்டிகை அளவு இந்த பொடி சேர்த்து, நன்றாக மென்று சாறை விழுங்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தாலே விந்து அடர்த்தியாக வெளியேறும்.

  • பூனைக்காலி விதையுடன், தண்ணீர் விட்டான் கிழங்கு, நெல்லி அனைத்தையும் சேர்த்து சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதை சலித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் சிறு டீஸ்பூனில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கு. விந்து நீர்த்து போவதும் கட்டுப்படும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஆண்மை பாதிப்பை சரி செய்யும்.

  • ஓரிதழ் தாமரை, ஆலம் கொழுந்து, அம்மான் பச்சரிசி, ஜாதிக்காய் சேர்த்து பொடித்தும் தேனில் குழைத்து சாப்பிடலாம். அல்லது ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் அனைத்தையும் சுத்தம் செய்து அரைத்து விற்கும் பொடியையும் வாங்கி பயன்படுத்தலாம். இது இழந்த ஆண்மையையும் சரி செய்யகூடிய அற்புதமான மூலிகை.

  • அமுக்கிராங்கிழங்குப் பொடியை தேன் கலந்து குழைத்து கொடுத்தாலும் தாது பலப்படும். பாலியல் வாழ்க்கை குறைபாட்டை சமநிலைப்படுத்தி ஹார்மோன் சுரப்பிகளை வேலை செய்ய வைத்து பாலியல் வாழ்க்கையில் ஈடுபாட்டை உண்டாக்க செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்