இந்த ஒரேயொரு காயை சாப்பிடுங்கள்! அதனால் எவ்வளவு நோய்கள் குணமாகும் தெரியுமா?

Report Print Raju Raju in ஆரோக்கியம்

வெள்ளை பூசணிக்காயில் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்துள்ளது.

பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும்.

வெள்ளை பூசணிக்காய் வலிப்பு நோய், தலைப்பேன்கள், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்திவிடுகிறது.

முடி நன்கு வளரவும், தலையில் பேன்கள் குடியேறாமல் இருக்கவும், வறண்ட முடிகள் எண்ணெய்ப் பசையுடன் காட்சியளிக்க பின் வருமாறு செய்ய வேண்டும்.

பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் போதும், பலன் கிடைக்கும்.

1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.

பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும். இது முக்கியமான மருந்தாகும்.

இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும். இரத்தத்தை உறையச் செய்வதில் வெள்ளை பூசணி முக்கிய இடத்தை வகிக்கிறது.

பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடிபோலச் சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும்.

வெள்ளை பூசணியில் சிறிதளவே புரதம், மாவுபொருள்கள் ஆகியன உள்ளன. ஆனால் அதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியனவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், ‘சி’ வைட்டமினும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் இதயம் பலம் பெறுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்