வழக்கமாக அதிக கலோரிகளைக் கொண்ட உணவாகக் கருதப்படும் நட்ஸ், சமீபகாலங்களில் தினசரி உணவுப்பட்டியலில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
காரணம் இல்லாமல் இல்லை...ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது என்றும், நட்ஸ் சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது என்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இரவு நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இரவுகளில் ஹெவியான உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுகிறது.
அதோடு இரவு எந்த உடல் உழைப்பும் இன்றி இருப்பதாலும் செரிக்க மிகவும் எளிதான உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்புகள் தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைக்கும். இது சக்து பற்றாக்குறையை போக்கும். பருப்புகள் தொடர்ந்து சாப்பிட்டு சருமத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நல்லது ஆகும். நட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையும், பற்றாக்குறை சத்துக்கள் கிடைக்கப் பெறலாம். நட்ஸ் வகைகள் பல உள்ளன அவற்றின் பயன்கள் பல உள்ளது இவற்றை அறிந்து சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும்.
வைட்டமின் ஈ
நாம் சாப்பிடும் நட்ஸ்மளிலுள்ள வைட்டமின் ஈ இளமையை நீட்டிக்கச் செய்கின்றது. இதை நோட்டு பன்னுங்க முகத்திற்கு அது இதுன்னு வாங்கி பயன்படுத்துவதை விட இந்த நட்ஸ் சரியாக சாப்பிட்டு வாங்க நல்லது நடக்கும்.
மன அமைதி
பருப்பு வகைகள் மனதை சாந்தப்படுத்துகின்றன. வேலையினால் ஏற்படும் மூளை சோர்வை நீக்கச் செய்யும். பிஸ்தாவில் உள்ள சத்துக்கள் புற்று நோய் தடுப்பாக இருக்கும். உடலில் கொழுப்பு சக்தியை ஒழுங்குபடுத்தி ஆரோக்யமாக இருக்க இது அவசியம் ஆகும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகியவை தினமும் இரண்டு இரண்டாக சாப்பிட வருவது கட்டாயம் ஆகும்.
இனப்பெருக்க மண்டலத்தின் இயக்கம் சீராக
தினமும் நட்ஸை சிறிது சாப்பிட்டு வந்தால், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், புற்றுநோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை தடுக்கப்படுவதோடு, இனப்பெருக்க மண்டலத்தின் இயக்கமும் சீராக இருக்கும்.
இறப்பு விகிதம்
இறப்பு விகிதம் குறைவு மற்றொரு ஆய்வில், தினமும் 10 கிராம் நட்ஸ் சாப்பிட்டு வந்தவர்கள் நோயால் இறக்கும் வாய்ப்பு 23% குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.