பொதுவாக ஒருவருக்கு வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும்.
குறிப்பாக வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழிமுறைகளை கையாளுவது நல்லது.
அந்தவகையில் ஒரே வாரத்திற்குள் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைப்பது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- ஒரே நேரத்தில் அதிகமாக உண்பதற்குப் பதிலாக அடிக்கடி குறைந்த அளவிலான உணவை உண்ணலாம் என்பதாகும். அது நமது பசியைக் குறைப்பதோடு, அதிகமாக உண்ணுவதையும் தடுக்கிறது. மேலும் நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
- சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக தண்ணீா் அருந்தினால் அது நம்மை குறைவாக சாப்பிட வைக்கும். அதனால் நமது குறைந்த அளவிலான கலோாிகளே நமது உடலுக்குள் செல்லும். ஆகவே தகுந்த இடைவெளியில் தண்ணீா் அருந்துவது நல்லது.
- உடலில் உள்ள தேவையில்லாத நீா் வெளியேறாமல் அது உடலிலேயே தங்குவதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவும் காரணமாக இருக்கிறது. ஆகவே நீா் உடலில் தங்கிவிடுவதால் தானாகவே உடல் எடை அதிகாித்துவிடுகிறது. குறைவான அளவு உப்பை எடுத்துக் கொண்டால் உடல் வீக்கம் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
- நாம் அதிக அளவிலான புரோட்டீன் மற்றும் நாா்ச்சத்து மிகுந்த அதே நேரத்தில் குறைந்த அளவு கலோாி கொண்ட குறைந்த அளவிலான மதிய உணவை எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள கலோாி குறைந்து உடல் தானாகவே குறைந்துவிடும்.
- அடிக்கடி குறைந்த அளவிலான ஆரோக்கியமான திண்பண்டங்களை உண்ண வேண்டும். பொறித்த சிப்ஸ்கள் மற்றும் ஆரோக்கியத்தைத் தராத ஆனால் உடல் எடையை மட்டுமே அதிகாிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களை உண்ணக்கூடாது.