சாப்பிட்டவுடன் இந்த 5 செயல்களை செய்யவே கூடாது! மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Raju Raju in ஆரோக்கியம்
418Shares

உணவுகளை சாப்பிட்ட உடனே சில காரியங்களை செய்யக்கூடாது, அப்படி செய்வதால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 5 செயல்கள்
புகைப்பிடிப்பது

சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பது ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஒருவர் சாப்பிட்ட உடன் புகைப்பிடிப்பது என்பது அடுத்தடுத்து 10 சிகரெட்டுகளை புகைத்ததற்கு சமம் என்கின்றனர். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

தூக்கம்

சாப்பிட்டவுடனே படுக்கையில் விழக் கூடாது. உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கினால் செரிமானத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது என்பதால் செரிமான பாதிப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தல் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் செரிமான உறுப்புகள் முறையாகச் செயல்பட போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

குளிக்கக்கூடாது

சாப்பிட்டவுடன் குளிப்பதும் சரியல்ல. அப்போது, கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் போகும். இதனால் நாளடைவில் செரிமான உறுப்புகள் வலுவிழந்துவிடும்.

பழம், தேனீர்

சாப்பிட்டவுடன் பழம் எடுத்துக் கொண்டால் முதலில் பழம்தான் செரிமானம் ஆகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கடந்தபிறகு அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல், சாப்பிட்டவுடன் டீ குடிக்கக் கூடாது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்