தினமும் இந்த பழம் சாப்பிட்டால் மன அழுத்தம் மறைந்து போகும்!

Report Print Nalini in ஆரோக்கியம்
2017Shares

நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ். நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.

நெருப்பு கொண்டு சமைக்கப்படாத இயற்கையான உணவுகள் அனைத்துமே சத்துக்கள் நிறைந்த உணவு தான். இந்த இயற்கையான உணவுகளில், பழங்கள் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த உணவாகும்.

பல வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகள் கொண்டதாக இருக்கின்றன. ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, நோய் நொடிகளை நீக்குகின்றன. பிளம்ஸ் பழம் அப்படிப்பட்ட பழ வகைகளுள் ஒன்று. பிளம்ஸ் பழம்.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பிளம்ஸ் அதிகம் பயிராகிறது. சர்வதேச அளவில் பிளம்சை அதிகம் விளைவிக்கும் பாராக சீனா முதல் இடம் பெறுகிறது.

அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் பிளம்சில் மொத்தம் 2 ஆயிரம் வகை இருக்கின்றன. அபரிமிதமான வைட்டமின்களைக் கொண்டது பிளம்ஸ்.

பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.

எளிதில் ஜீரணமாகக்கூடிய பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள சாப்பிட்டால், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து மலச்சிக்கல் குறைபாட்டை சரி செய்யும்.

வாய்ப் புற்றுநோய்

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.

மன அழுத்தத்தைப் போக்க

ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்குவதோடு, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கக்கூடியது.

கண்பார்வையை தெளிவுற

கண்பார்வையை தெளிவுறச் செய்யும் சக்தி பிளம்ஸுக்கு உண்டு. இதயத்திற்கு சிறந்த டானிக், சிவப்பு நிற பிளம்ஸ் பழங்கள். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.

சிறுநீரகம்

நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்.

தலைமுடி

பிளம்ஸ் பழங்கள் தலைமுடிக்கு பல வகைகளில் நன்மைகளை புரிகிறது. இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் வைட்டமின் ஏ சத்துகள் அதிகம் உள்ளதால் முடிகொட்டுவதை தடுக்கிறது. பொடுகு போன்றவை தலையில் உருவாகாமலும் தடுக்கிறது. தலைமுடிகளின் அடர்த்தியும் கூடுகிறது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் பிரச்சனையையும் போக்குகிறது.

உடல் எடை

அதிக உடல் எடை பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பல வகையான நன்மை தரும் உணவுகளை உட்கொள்ளும் போது பிளம்ஸ் பலன்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. உடலில் இருக்கும் செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால் உடலில் கொழுப்புகள் அதிகம் சேராமல் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்