அன்றாட உணவில் கருப்பு எள்ளை சேர்த்து கொள்வதனால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
266Shares

எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், பழுப்பு அல்லது மஞ்சள் நிற எள் என நான்கு வகைகள் உள்ளன.

அதில் வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளது.

மேலும் இது சில நோய்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொண்டால் நாளடைவில் நல்ல பயனை பெறலாம்.

தற்போது கருப்பு எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடுவதானால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • எள்ளு விதைகளில் மக்னீசியம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கக்கூடியது. அத்தோடு இந்த விதைகளில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சீசமின் போன்றவை அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • எள்ளு விதைகள் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கலை சரி செய்யக்கூடியது. ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இந்த விதைகள் குடலியக்கத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மென்மையாக நடைபெறச் செய்யும்.

  • எள்ளு விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும். எள்ளு விதைகளில் உள்ள சீசமைன் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.

  • எள்ளு விதைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம், உடலில் செரடோனின் உற்பத்தி அதிகரித்து, மனநிலையில் உள்ள ஏற்ற இறக்கம் தடுக்கப்படும். மேலும் மனநிலையும் சந்தோஷமாக இருக்கும்.

  • எள்ளு விதைகளில் உள்ள மக்னீசியம், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

  • எள்ளு விதைகளில் கல்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை வலிமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

  • எள்ளு விதைகளை ஒருவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கலாம்.

  • உங்கள் அன்றாட உணவில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் இந்த சிறிய விதைகளில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை இளமையாகவும், அழகாகவும் வைத்திருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்