சினைப்பை நீர்க்கட்டி வரக் காரணம் என்ன? அதனை தடுக்க என்ன செய்யலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
598Shares

குழந்தையின்மைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சினைப்பை கட்டிகள் எனப்படும்.

பெண்கள், கருவுற முயற்சி செய்து இயலாமல் போன பின்புதான், சினைப்பை கட்டிகள் இருப்பது கண்டறியப்படுகிறது.

முப்பத்தைந்து வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களில் குழந்தையின்மைக்கு பெரும்பாலும் சினைப்பை கட்டிகள் முதன்மை காரணமாக அமைகிறது.

என்னத்தான் மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் இதனை ஒரு சில இயற்கை உணவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

  • சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம்.

  • கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும். இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி பிரச்சனைகள் குணமாகும்.

  • தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.

  • தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.

  • தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.

  • நெல்லிக்காய் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.

முக்கிய குறிப்பு

குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்