விந்தணு பெருக, ஆண்மை சக்தி அதிகரிக்க இந்த பூவை அடிக்கடி சாப்பிட்டாலே போதும்

Report Print Nalini in ஆரோக்கியம்
472Shares

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம். கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.

இரும்புச்சத்துக்குறைபாட்டை நீக்குவதில் முருங்கையின் பங்கு அளப்பரியது என்பது தெரியும். முருங்கையின் இலை, வேர், பூ, பட்டை, காய் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது.

30 வருடங்களுக்கு முன்பு எல்லோர் வீட்டிலும் முருங்கை மரம் இருக்கும். அதனால் வாரம் இருமுறையாவது முருங்கைப் பூ, முருங்கை இலை, முருங்கைக்காய் என்று சமையலில் தவறாது இடம்பெற்று விடும்.

நமது வீடுகளில் வளர்க்கும் முருங்கை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.

உடல்சூடு தணிய

ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

வீக்கத்தை கட்டுப்படுத்த

முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.

கண் வலிக்கு

இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங்கி விடும்.

நரம்புகள் புத்துணர்வு பெற

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

ஆண்மைச் சக்தி அதிகரிக்க

பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க் கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.

சீரற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு

சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள் முருங்கைப்பூவை துளி பசும்பால் விட்டு அரைத்து வைக்கவும். காய்ச்சிய பசும்பாலை கொதிக்க விட்டு, அரைத்த முருங்கைப்பூவை சேர்த்து இனிப்புக்கு பனங்கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறினால் லேகியப்பதத் துக்கு வரும். இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை நீங்கும்.மேலும் கருப்பை பிரச்னை, கருமுட்டையில் குறைபாடு இருந்தாலும் அவற்றை சரிசெய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்