சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் யாருக்கு அதிகம் ஏற்படும்? அதன் அறிகுறிகள் என்னென்ன?

Report Print Raju Raju in ஆரோக்கியம்
325Shares
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infection) மிகவும் பொதுவான தொற்றுநோய்களாகும். அவை ஆண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும்.
பெரும்பாலும் இந்த நோய் தொற்று பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.

சிறுநீர் பாதை தொற்றுநோயின் அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு, சிறுநீர் துவாரம் எரியும், அடிவயிற்றில் தசைப்பிடிப்பு, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம், சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.

இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும், சிறுநீரை அடக்கக்கூடாது, உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் டச் (douche) ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம், உங்கள் பிறப்புறுப்பு பகுதியின் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும், முடிந்தால் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்