பித்தம், ரத்த அழுத்தம் குறைய தினமும் இதை சாப்பிட்டாலே சரியாகும்!

Report Print Nalini in ஆரோக்கியம்
651Shares

சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும். இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

இக்காயின் தனிப்பட்ட சுவையின் காரணமாக சமையலில் இது முக்கிய இடத்தினைப் பெறுகிறது. சின்ன வெங்காயமானது லேசான இனிப்பு கலந்த கார சுவையினைப் பெற்றுள்ளது. இதனை வெட்டும்போது கண்ணில் நீர் வரவழைக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.

சின்ன வெங்காயம் மற்றும் அதனுடைய தாள்கள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இக்காயானது மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது. இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது. வெங்காயம் நாம் அன்றாடம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவாகும். நிறையப் பேர் வெங்காயத்தை உணவில் சேர்த்து சமைத்தாலும் சாப்பிடும் போது ஒதுக்கிவிடுவார்கள். இது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம் தான்

பித்தம் குறையும்

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

வாய் சார்ந்த பிரச்சனைகள்

வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

நரம்புத் தளர்ச்சி

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

இரத்த அழுத்தத்தை குறைய

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தலைவலி

வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது.

கட்டிகள் உடைய

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்