ஒருவருக்கும் உடல் எடை கூடுவது எவ்வளவு பிரச்சினையோ அதே அளவிற்கு எடை குறைந்தாலும் அது பிரச்சினையை ஏற்படுத்தும்.
இதனை ஆரம்பத்திலே கவனித்து கொள்வதே சிறந்தது. இல்லாவிடின் இது புற்றுநோய், இதயநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் தற்போது திடீரென ஒருவர் உடல் எடையை குறைத்தால் உண்டாகும் ஆபத்துகள் சந்திக்க நேரிடும் என்பதை இங்கு பார்ப்போம்.
- உண்ணாவிரதம் இருக்கும்போது அதிவிரைவில் நம் உடல் எடை குறைந்து போகும். இதனால் போஷாக்கின்மை அல்லது சத்து குறைபாடு என்று கூறுகிறோம். இவ்வாறு நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்து நம்மை இறப்பை நோக்கி இறுதியில் அழைத்தும் செல்கிறது.
- சர்கோபீனியா நம்முடைய எழும்பு தசைகளை கொஞ்சம் கொஞ்சமாய் வழுவிழக்க செய்துவிடுகிறது. ஆம், நல்ல சத்துள்ள ஆகாரங்களை நாம் எடுக்க தயங்கும்போது, நம்முடைய உடல் எடை குறையும். அப்படி குறையும் பட்சத்தில் இந்த எழும்பு தசைகள் முற்றிலும் வழுவிழந்து நம் ஆற்றலை உறிஞ்சிவிடுகிறது.
- நம் உடல் எடை குறையும் பட்சத்தில் அந்த இயற்கை செல்கள் அழியும் தருணமும் ஒருவனுக்கு உடல் எடை குறைவால் ஏற்படுகிறது. இதனால் செல்களின் இனப்பெருக்கத்தில் அசாதாரணமான ஒரு நிலைமை ஏற்படுகிறது. அது புற்று நோயை உருவாக்கும் பேராபத்தும் உள்ளது.
- நாம் வயிற்றை பேணி காக்க வேண்டியது மிகவும் அவசியம். தவறும் பட்சத்தில் வயிற்றில் புண் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உடலை கரைத்துவிடுகிறது. நம் உடல் எடை குறையும் பட்சத்தில் இதனை நாம் உணரமுடியும்.
- உடல் எடை குறையும் பட்சத்தில் மன அழுத்தமும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. நாம் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் பொழுது நம் உடல் எடையும் குறைந்து போகும். இதனால், மூளையில் உள்ள செரோடோனின் அளவை இது முற்றிலும் பாதித்துவிடுகிறது.
- எப்பொழுது இதயம், போதுமான இரத்தத்தையும் ஆக்சிஜனையும் உடம்பில் பம்ப் செய்ய மறுக்கிறதோ அப்பொழுது ஒருவனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. அதுமட்டும் அல்லாமல், நம் உடல் எடை குறைந்து இதய தசைகளை வழுவிழக்கவும் செய்கிறது.
- திடிரென்று நம்முடைய உடல் இழைக்க தொடங்கவே, நம் உடம்பில் இருக்கும் சத்துகள் குறைய தொடங்கும். இதனால், முதுமை பருவத்தை தோற்றுவிக்கும் செல்கள் இளமைபருவத்திலேயே முன் நடத்தி செல்ல, மிக இளமையிலே நாம் முதுமை அடையும் அவல நிலை உருவாகிறது.