காலையில் எழுந்திருக்கும்போதே தலைவலிக்குதா? என்ன காரணமாக இருக்கும்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
585Shares

பொதுவாக நம்மில் சிலர் காலையில் எழுந்திருக்கும்போதே தலைவலியை சந்திப்பதுண்டு. ஆனால் சிலருக்கு இது எதனால் ஏற்படுகின்ற என்ற காரணம் தெரியமால் இருக்கும்.

அடிக்கடி தலைவலி வருகிறதென்றால் அதை அலட்சியப் படுத்தக்கூடாது. ஏனெனில் இது வேறு பல சிக்கலை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் காலை வேளையில் ஏன் தலைவலி ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • உங்களுக்கு தூக்கமின்மை இருக்கிறதென்றால் காலை வேளையில் தலைவலி வருவது சகஜமே. அதுவும் இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கியும் உங்களுக்கு புத்துணர்ச்சி கிட்டவில்லை மற்றும் மேலும் ஓய்வு தேவைப்படுகிறதென்றால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்று அர்த்தம்.

  • அதிகாலை வேளையில் ஏற்படும் தலைவலி ஒற்றை தலைவலியாக கூட இருக்கலாம். ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

  • நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணை அல்லது தூங்கும் போது தலையை சரியான நிலையில் வைத்து தூங்காதது கூட அதிகாலை வேளை தலைவலிகளுக்கு காரணமாக இருக்கலாம். எனவே சரியான தலையணையை பயன்படுத்துங்கள் மற்றும் சரியான நிலையில் படுத்து உறங்குங்கள்.

  • அதிகாலை வேளையில் தலைவலி ஏற்படுகிறதென்றால் இரவு தூங்கும் போது உங்கள் பற்களை நறநறவென்று நீங்கள் கடித்திருக்கலாம். நறநறவென்று பற்களை கடிப்பதால் டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகளில் (temporomandibular joints) அழுத்தம் ஏற்படலாம். இதனால் காலையில் தாடை வலியும் ஏற்படலாம்.

  • மூளையில் உள்ள கட்டியால் ( brain tumour )அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு தலைவலி ஏற்பட்டிருக்கலாம். அந்த கட்டி வீங்கிக் கொண்டே போவதால் மூளையில் அழுத்தம் அதிகரித்து ஒரு நாளில் நிறைய தடவைகள் தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்