சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா ?

Report Print Kavitha in ஆரோக்கியம்
608Shares

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில், சாப்பிட வேண்டும், அவர்கள் எந்த உணவுகளைதான் உண்ண வேண்டும், இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் சில உணவைகளை உட்கொள்வதனால் சர்க்கரை அளவை தானாகவே உயர்ந்த உதவுகின்றது.

அதிலும் சிலருக்கு முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா? கூடாது என்ற சந்தேகம் காணப்படும்.

அந்தவகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை பற்றி பார்ப்போம்.

ஆய்வு கூறுவது என்ன?

வாழைப்பழங்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இடையில் ஒரு இணைப்பு உள்ளது என்று ஒரு ஆய்வின் முடிவு கூறுகிறது.

ஒரு ஆய்வின்படி, வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் சிகிச்சையளிக்கிறது.

வாழைப்பழத்தில் குறைந்த க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறியீட்டு உள்ளது. இது இரத்த சர்க்கரையின் நுகர்வுக்குப் பிறகு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது.

பாதுகாப்பானதா?

உடலின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க கார்போஹைட்ரேட் மிக முக்கியமானது. எனவே இதை உணவிலிருந்து முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது.

நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவு வாழைப்பழங்கள் சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

பயன் என்ன?

  • நீரிழிவு நரம்பியல் என்பது உயர் இரத்த சர்க்கரை காரணமாக நரம்புகள் சேதமடையும் நிலை. இத்தகைய வகை நீரிழிவு வைட்டமின் பி6 இன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

  • வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரப்பை மற்றும் சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாகா மாற்றப்படும் அளவை குறைக்கிறது.

  • வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இது நீரிழிவு நரம்பியல் நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். சரியான அளவு வாழைப்பழங்களை உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்