அதிமதுரத்தின் அற்புத பலன்கள்- தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Nalini in ஆரோக்கியம்

இன்றைய கால கட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கையானது அதிகளவில் மாற்றங்களை கொண்டதாகவுள்ளது.

வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை நோயாளியாக்குகின்றது. அதனால் நம்மை காக்க நாம் பல்வேறு மூலிகைகள், முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழிமுறைகளை நாட வேண்டியுள்ளது.

இது முலேத்தி என்றும் அதிமதுரம் வேர் என்றும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவம், ஆயுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள மருத்துவ முறைகளை நாம் கையாண்டு வாழ்வியல் முறைகளின்ம் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்கலாம்.

இந்தியா மூலிகைகளின் சொர்கம் ஆகும். இது குறித்து நம் முன்னோர்கள் குறிப்புகளை நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று அதிமதுரம் ஆகும்.

அதிமதுரம் (கிளைசிரிசா கிளாப்ரா என்று அழைக்கப்படும் ஒரு தாவரத்தின் வேர்) பல நோய்களுக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது.

அதிமதுரம் பெரும்பாலும் இனிப்பு மற்றும் இனிப்பு பானங்களில் இனிப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நம் முன்னோர்கள் அதன் வேரை பல நூற்றாண்டுகளாக மருத்துவ நன்மைகளுக்காகப் பயன்படுத்தினர் என சில ஆய்வுகள் நமக்கு கூறுகிறது.

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

சருமம் பளபளக்க

உங்கள் முகத்தில் புள்ளிகள் இருந்தால், கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றில் மதுபானப் பொடியை தூவி, ஒரு பேஸ்டாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் பூசி, உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும். மேலும், அதிமதுரத்தின் காபி பருகுதல் உங்கள் இரத்தத்தில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து சருமத்தை பளபளக்க செய்யும்.

மலச்சிக்கலுக்கு

வயிற்றுப் புண் இருப்பதாக தெரிந்தால், அதிமதுரத்தை குளிர்ந்த நீரில் கலந்து குடிக்க வேண்டும் இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டும் அல்லாமல், வயிற்றின் காயத்தை குணப்படுத்தவும் உதவும். அதேவேளையில் காசநோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்.

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

உடல் உஷ்ணம்

அது மட்டுமில்ல, உடல் சூடு பிரச்சனை உள்ளவங்க ஒரு 17 கிராம் அதுமதுரம் எடுத்து வெந்நீர் விட்டு கலக்கி, பிறகு வடிகட்டி தினமும் ரெண்டு வேள குடிச்சா உடல் உஷ்ணம் தணியும்!

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்