உங்களுக்கு அடிக்கடி வலது பக்க வயிறு வலிக்குதா? இந்த பிரச்சினையாக தான் இருக்குமாம்..உஷாரா இருங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்
352Shares

ஒருவரது வலது பக்க அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் வலியானது மிகவும் தீவிரமாக தொடர்ந்து இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில் அது உடலில் உள்ள கடுமையான பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

இம்மாதிரியான வலி ஏற்பட்ட என்ன காரணம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • குடல்வால் அழற்சி இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை சந்திக்கக்கூடும். எப்போது குடல் வால் பகுதியில் அழற்சி ஏற்பட்டு, சீழ் நிறைந்திருக்கிறதோ, அப்போது இம்மாதிரியான வலியை அனுபவிக்கக்கூடும். வழக்கமாக இம்மாதிரியான வலி அடிவயிற்றின் நடுப்பகுதியில் தொடங்கி, பின் மெதுவாக வலது பக்கத்தில் பயணித்து மிகவும் கடுமையானதாக்கிவிடும்.

  • அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியுடன், நெஞ்செரிச்சல் மற்றும் உப்புசத்தை சந்தித்தால், அஜீரண கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

  • குடல் பகுதியில் வாயு அதிகமாக தேங்கினால், அது உப்புசத்தை உண்டாக்குவதோடு, அடிவயிற்றுப் பகுதியில் வலியையும் ஏற்படுத்தும், வழக்கமாக இம்மாதிரியான அறிகுறிகளை தானாக சரியாகிவிடும்.

  • சிறுநீரகங்களில் தாதுக்கள் மற்றும் உப்புக்களின் பெருக்கத்தினால் உருவாவது தான் சிறுநீரக கற்கள். வழக்கமாக சிறுநீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் போது, சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இந்த கற்களின் அளவைப் பொறுத்து வலியின் தீவிரம் வேறுபடும்.

  • சிறுநீரகங்களில் தொற்று இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை அனுபவிக்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில் வலி மிகவும் தீவிரமாக இருப்பதில்லை. இருப்பினும், சிக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், லேசான வலியை அனுபவிக்கும் போதே மருத்துவரை அணுகுவதே நல்லது.

  • எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்பது பெருங்குடலை பாதிக்கும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும். வயிற்று வலி, வயிற்று உப்புசம், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்றவை இதன் பிற அறிகுறிகளாகும்.

  • உடலின் உள்பகுதி ஒரு தசை அல்லது திசு வழியாக வெளியே தள்ளி சிறிய கட்டி போன்றவை ஏற்படுத்தும் போது குடலிறக்கம் என்னும் ஹெர்னியா ஏற்படுகிறது. இவை பொதுவாக அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி நிகழ்கின்றன. இருப்பினும், சிலருக்கு இது கடுமையான வலியை உண்டாக்கலாம்.

  • பெண்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிவயிற்றின் மாதவிடாய் பிடிப்புகள், கருப்பை நீர்க்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், இடுப்பு அழற்சி நோய், கருப்பை முறிவு மற்றும் எக்டோபிக் கர்ப்பம் ஆகியவை அடங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்