நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இந்த தூக்க தைலத்தை தேய்ங்க போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
281Shares

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். மேலும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

மோசமான தூக்கமானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்க கூடும்

இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணிநேர தூக்கம் அவசியம். இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பணியிட நெருக்கடி, கவலை, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வுகளும் காரணம். உடல் உறுப்பில் ஏதேனும் வலி இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்தது.

நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கு ஏராளமான குறிப்புகள் உள்ளன.

அந்தவகையில் பணம் அதிகம் செலவழிக்காமல் இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக ஒரு தூக்க தைலம் தயாரிக்க என்ன பொருட்கள் வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
  • தேன் மெழுகு - 1 டேபிள் பூன்
  • வைட்டமின் ஈ எண்ணெய் - 1 டீபூன்
  • ஆரஞ்சு அத்தியாவசிய நறுமண எண்ணெய் - 8 துளிகள்
  • லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் - 8 துளிகள்
  • சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 1 சீமைச்சாமந்தி தேநீர் பை
  • சிறிய கண்ணாடி ஜார்
செய்முறை

முதலில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறக்கவும்.

பின் அந்த எண்ணெயை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சீமைச்சாமந்தி தேநீர் பையை போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

பின்பு அந்த பையை பிழிந்து எடுத்துவிட வேண்டும்.

ஒரு பௌலில் தேன் மெழுகை உருக்கி எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் ஊற்றி, செட் ஆகும் வரை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், தைலம் தயார்.

இரவு தூங்குவதற்கு படுக்கைக்கு வந்த பின், தயாரித்து வைத்துள்ள தூக்க தைலத்தை நெற்றி மற்றும் உள்ளங்காலில் தடவ வேண்டும்.

அப்படி தடவும் போது சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின் மொபைல், லேப் டாப் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை அணைத்து விட்டு, கண்களை மூடினால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

பலன்கள்

இது ஒரு சிறப்பான மன அழுத்த நிவாரணியாகும். இது தசைகளை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தும்.

இதில் உள்ள லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். இவையெல்லாம் சேர்ந்து படுக்கையில் படுத்ததும் விரைவான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறத் தூண்டும்.

குறிப்பு

ஒருசிலருக்கு இந்த தைலம் வேலை செய்ய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் இந்த தைலம் ஒரு நல்ல பலனைத் தரக்கூடியது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்