வயிற்றில் உள்ள கொழுப்பை விரைவாகக் குறைக்க ஆசையா? இந்த பானத்தைக் குடித்தால் போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
579Shares

பொதுவாக நமது உடலில், வயிற்று பகுதியில் கொழுப்பு விரைவாகச் சேர்ந்து விடும். இது மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற பல நோய்கள் வந்துவிடக்கூடும். இவற்றிற்கெல்லாம் வயிற்றுக்கொழுப்பே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

இதனை குறைக்க உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதாது ஆரோக்கியமான உணவுகள், பானங்கள் என்பவற்றை எடுப்பது நல்லது.

அந்தவகையில் வீட்டிலேயே எளிதான முறையில் தொப்பையை கரைக்க கூடிய சூப்பரனா பானங்கள் என்ன என்பதை பார்ப்போம்

இஞ்சி பானம்

அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் இரண்டு முதல் மூன்று துண்டுகள் இஞ்சியைச் சேர்க்கவும், இதைப் பன்னிரண்டு முதல் பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.

பின் அதனை வடிகட்டி, அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்தால் போதுமானது. இதைத் தினமும் சுமார் 250 மில்லி லிட்டர் அளவு எடுத்து காலையிலும், இரவிலும் உணவிற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலையில் இந்த பானத்தைக் குடித்த பின், சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே, எந்த உணவையும் சாப்பிட வேண்டும்.

இலவங்கப்பட்டை பானம்

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு இலவங்கப்பட்டைத் தூளைச் சேர்க்கவும். பின்பு பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

பின் அதனை வடிகட்டி, அத்துடன், அரை எலுமிச்சம்பழத்தின் சாற்றைச் சேர்க்க வேண்டும். பின்பு கொஞ்சம் அதன் சூடு ஆறியவுடன், தேனைக் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும்.

இதைக் குடித்த பின் குறைந்தது அரை மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக்கூடாது.

​ஆப்பிள் வினிகர் சாறு

ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் வினிகர் சாற்றைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாற்றில் நான்கு அல்லது ஐந்து சொட்டுகள் சேர்க்கவும்.

இந்த பானத்தைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தூங்கும்போது, கொழுப்பைக் குறைக்க இது உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்