ஆப்பிள் பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கிய பழமாக உள்ளது.
ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, அடங்கயுள்ளன.
இவை அனைத்தும் உள்ளதால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைக்கிறது.
இருப்பினும் ஆப்பிளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. இது உடலில் வேறு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- ஆப்பிளில் நார்ச்சத்து அடங்கியுள்ளதால் இதனை அதிகமாக எடுத்து கொள்ளும் பட்சத்தில், அது செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
- அதிக ஆப்பிள் சாப்பிடும் பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு உபாதைகள் வரலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
- குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் அல்லது நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள், பழங்களை சிறிது சாப்பிட்டாலும், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரித்து விடுகிறது.
- ஆப்பிள் விளைச்சலின் போது, விவசாயிகள் diphenylamine என்ற வேதிப்பொருளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேதிப்பொருளில், புற்றுநோயை உருவாக்கும்.
- ஆப்பிள் பழங்களில் அதிகளவில் கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுகிறது.
- ஆப்பிள் அமிலத்தன்மை கொண்டதாக உள்ளதால், இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பற்களில் சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- ஆப்பிள் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடலில் எரிச்சல் நோய்க்குறி ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆப்பிள் பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, செரிமான மண்டலத்தை பாதித்து ஜீரணத்திறனை தடை செய்கின்றன. அடிக்கடி வீக்கம், வாயுக்கோளாறுகள், செரிமான அசௌகரியங்கள் உள்ளவர்கள், ஆப்பிள் பழத்தை போதுமானவரை தவிர்ப்பது நல்லது.