நீங்கள் இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுகிறீர்களா? அப்போ இந்த பயங்கரமான விளைவுகளை சந்திப்பீர்களாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
177Shares

பொதுவாக இரவு உணவானது எளிதில் ஜீரணமாகும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் மிதமான அளவிலேயே உணவை உட்கொள்ளவும் வேண்டும் என்று நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூறுவதுண்டு.

ஏனெனில் இரவு நேரத்தில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால், வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் போது ஜீரணமாகாமல் போகலாம். மேலும் கூடுதல் கலோரிகளும் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கும்.

நிறைய பேர் இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுகின்றனர்.

இப்படி ஹெவியான உணவுகளை இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடலில் பல பயங்கரமான மாற்றங்கள் நடக்கும். தற்போது அவை என்ன என்பதை நாழும் தெரிந்து கொள்வோம்.

  • இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்டால் மற்றும் மிகவும் தாமதமாக இரவு உணவை சாப்பிட்டால், அது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும். இதனால் காலை உணவைத் தவிர்க்க நேரிட்டு, உடல் ஆரோக்கியம் பாழாகும்.
  • தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீர்குலைந்து போவதோடு, நாளடைவில் இரைப்பை குடல் நோய், இரைப்பை அழற்சி, இரைப்பை புண், குடல் அழற்சி, மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
  • எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறாரோ, அவர்களது இதயமானது வழக்கத்திற்கு மாறாக மிகவும் கடினமாக செயல்படும். இதன் விளைவாக இதயத்துடிப்பும் அதிகரிக்கும். அதிலும் மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை உண்ணும் போது, அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
  • இரவு வயிறு நிறைய சாப்பிடுவது ஒருவரது ஆழமான தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். இரவு நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், மறுநாள் உங்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருக்கும். இதனால் கூட பலர் அதிக மன அழுத்தத்தை உணர்வதோடு, காலையிலேயே சோர்வையும் உணர நேரிடுகிறது.
  • இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக உணவை உண்பது, பித்தக்கற்கள் உள்ளவர்களுக்கு கடுமையான கணைய அழற்சி அபாயத்தை அதிகரிக்கும். சில சமயங்களில், கடுமையான கணைய அழற்சி திடீரென்று தீவிரமாகி, அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்