சுவையாக இருக்கும் கேரட்டை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
140Shares

கேரட்டை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள், அதிலும் பச்சையாக கேரட்டை சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.

கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.

தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்