வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
3604Shares

வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுகிறது.

வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடியது. வெந்தய செடியின் பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது.

வெந்தயம் ஆயுர்வேதத்தில், அதன் தனித்துவமான பயன்கள் மற்றும் பண்புகள் காரணமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இருப்பினும் இதை அதிகமாக எடுத்து கொள்வதனால் பக்கவிளைவுகள் கூட ஏற்படுத்தும்.

அந்தவகையில் வெந்தயத்தை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

therapies
  • நீங்கள் அதிகமாக வெந்தயத்தை உட்கொண்டால் உங்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை, வாந்தி உணர்வு, சிறுநீரில் அதிக துர்நாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்படும்.
  • பாலூட்டும் அம்மாக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை வயிற்றுப் போக்கு ஏற்படும். ஏனென்றால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் நீங்கள் பாலூட்டுவதால் அது பிறந்த குழந்தைகளுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவே அதை உடனே தடுப்பது நல்லது.
  • வெந்தயத்தின் உள்ளே இருக்கும் கூட்டுப் பொருட்களால் சில பேருக்கு அலர்ஜிகள் ஏற்படலாம். இதன் விளைவாக அவரது உடலில் அல்லது தோலில் சிவப்பாக வீக்கம் ஏற்படலாம்.
  • குழந்தைகளுக்கு வெந்தய டீ அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. இது இயற்கையாகவே குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதை தொடர்ந்து கொடுப்பதால் குழந்தைகளின் குடல்கள் வலிமையை இழக்கின்றன.
  • சர்க்கரை நோயுள்ள ஒருவர் சர்க்கரை நோயின் மருந்துகளோடு இந்த வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால் அவருடைய உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது. அதன் காரணத்தால் அவருடைய உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்.
  • வேறு ஏதாவது நோய்க்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் அதனுடைய மாத்திரைகளை நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொண்டிருந்தால் அப்போது அந்த மாத்திரைகள் சாப்பிடும் பொழுது உங்கள் அன்றாட உணவுப் பொருட்களில் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று உங்களுடைய மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.
  • நீங்களும் தேவைக்கு அதிக அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும். அதே சமயத்தில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீரில் துர்நாற்றம் அதிகமாக வீசும்.
  • கர்ப்பிணிகள் . வாசனைக்காக வேண்டுமென்றால் வெந்தயத்தை உணவில் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அதையே நீங்கள் வாடிக்கையாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு அஜீரணம், உடலில் சோர்வு, வாந்தி உணர்வு மற்றும் வீக்கம் என பல வகையான அறிகுறிகள் தென்படலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்