காளானை ஏன் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
290Shares

காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும்.

உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் எல்லா வித சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய ஒரு தாவரமாகும்.

உலகின் பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன.

அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை ஆகும். இதில் ஒவ்வொரு காளானும் பல்வேறு சிறப்பான பயன்களைத் அள்ளி தருகின்றது.

இதில் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.

அந்தவகையில் காளானை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? இதனை யார் எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 • ஆண்களுக்கு புராஸ்சுடேட் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து தப்பிக்க வாரம் 3 முறை உணவில் காளான் சேர்த்துக் கொள்ளலாம்.

 • காளான்களில் உள்ள ரிபோநியூக்ளியோடைட்கள் மற்றும் குளூட்டோமேட்கள் உங்களை மாரடைப்பு போன்ற இதயநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இவற்றை சமையலில் உப்புக்கு பதிலாக சேர்க்கலாம்.

 • காளான்லில் ஃபோலேட் அமிலம் உள்ளதால் அது கர்ப்பகாலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

 • காளான்களில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்களில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதிலுள்ள மைக்ரோஃபேஜ்கள் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காளான்கள் சாப்பிடலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் பிற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வல்லது.

 • காளானில் உள்ள வைட்டமின் டி, செலினியம், ஆன்டி ஆக்ஸிடன்கள், தாமிரம் ஆகியவை முடி உதிர்தலை தடுத்து அவை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் வீக்கம், குடற்புழுக்களை தடுக்கிறது.

 • காளானில் மற்ற காய்கறிகள் மூலம் பெறமுடியாத வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை காளான் அளிக்கிறது.

 • காளானில் உள்ள வைட்டமின் பி1 நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. வைட்டமின் பி2 கண்களின் ஆரோக்கியத்திற்கும், வைட்டமின் பி3 செரிமானம் நடைபெறவும், வைட்டமின் பி5 ஹார்மோன்கள் உற்பத்தியிலும், வைட்டமின் பி6 மனச்சோர்வை நீக்குவதிலும் பங்களிக்கிறது.

 • காளானில் உள்ள ஹைலூரானிக் அமிலம் சருமங்களில் ஈரப்பதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலிசாக்கரைடு தேவையான சத்துக்களை வழங்குகிறது. மேலும் இதிலுள்ள கோஜிக் அமிலம் தோல் சுருக்கம், முகத்தில் கோடுகள் போன்ற வயது முதிர்வுக்கான பிரச்சனைகளை தடுத்து இளமையான தோற்றம் பெற உதவுகிறது.

​காளான்களை எப்படி பயன்படுத்தலாம்?

 • முதலில் காளான்களை கழுவுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க காகித துண்டை பயன்படுத்தலாம்.

 • இதனை சாண்ட்விச், இறைச்சிகள் போன்றவற்றுடன் இணைத்து சாப்பிடும் போது அவை கூடுதல் சுவையளிக்கின்றன.

 • அதேபோல சிறிய காளான்கள் சூப் வைக்க ஏற்றவை. மேலும் காளானை பொடியாக அரைத்து டீ, சாலட் போன்றவற்றில் பயன்படுத்தி கொள்ளலாம்.

 • காளான் சேர்ப்பதால் தோல் அலர்ஜி, வாந்தி, படபடப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உபயோகிப்பதற்கு முன் அது நல்ல காளானா இல்லை நஞ்சு கலந்த காளானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

​யாரெல்லாம் காளான் சாப்பிடக்கூடாது?

 • காளான் பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டுள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் நிச்சயம் காளான்களை தவிர்க்க வேண்டும்.

 • இதில் ப்யூரின் சத்து இருப்பஹால் கீழ்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்க்க கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்