இன்றைய காலத்தில் கொரோனா வைரஸிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வைரஸ் பரவுவதைத் தடுக்க வருமுன் காக்கும் வழியில் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சானிடைசர் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
என்னத்தான் வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும்.
அதிலும் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷமாக மாறிவிடும்.
அந்தவகையில் தற்போது சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்னாகும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
- டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில் விஷத்தன்மையும் கலந்திருக்கிறது.
- அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.
- தசைகள் மற்றும் ஈரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.