மூளை நன்றாக வேலை செய்ய இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்!

Report Print Nalini in ஆரோக்கியம்
0Shares

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.

நமது நாட்டின் பாரம்பரிய உணவுகளை சமைக்கும் போது அதில் ஒரு பகுதியாக கீரை உணவுகள் இடம் பெறுவது இயல்பு. எந்த வகையான கீரைகளும் உடல்நலத்திற்கு மிகுந்த நன்மைகளை தருபவை தான்.

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, ரத்த பேதியால் உண்டாகும் கடுப்பு போன்றவை தீரும். இவைதவிர, நினைவாற்றல் அதிகரிக்கும். காய்ச்சல் குணமாகும். வேறு பல நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது.

தோல் நோய்கள்

வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

மனநோய்

அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்தவிதமான அச்சம், பயம் போன்ற பலவகையான மனநோய்களும் விலகும்.

வீக்கம், கட்டிகள்

வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

காய்ச்சல்

இக்கீரையானது தொண்டைக்கட்டுதல், காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.

நரை முடி

வல்லாரை ஒரு சிறந்த சித்த மருத்துவ மூலிகை ஆகும் முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. இந்த சூரணத்தை ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.

யானைக்கால்

வியாதி சாக்கடையில் இருந்து உற்பத்தியாகும் ஒரு வகை கொசு கடிப்பதால் யானைகால் நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ஆங்கில வழி மருத்துவம் செய்து கொள்ளும் அதே நேரத்தில் வல்லாரை கீரையின் இலைச்சாறு தினந்தோறும் 5 மி.லி.காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் யானைக்கால் வியாதி மற்றும் அந்நோய் பாதிப்பால் ஏற்ப்படும் விரைவாதம் நோயும் நீங்கும்.

மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. இதற்கு வல்லாரை கீரையோடு உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்