கழிப்பறையில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுவது ஏன்? இப்படி செய்வது தான் காரணமாம்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
0Shares

கழிப்பறை மற்றும் குளியலைறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இரத்த ஓட்டத்தில் உண்டாகும் பிரச்சனைகள் காரணமாக இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது.

இரத்தம் அனுப்பும் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது இந்த நிலை உண்டாகிறது.

கழிப்பறை

மலம் கழிக்கும்போது அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இயற்கையல்லாத நிலையில் அமர்ந்து மலம் கழிப்பதால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து உண்டாகிறது. இப்படி செய்வது இதய மண்டலத்தை நேரடியாக பாதிக்கிறது .

அதிக சிரமத்துடன் மலம் கழிக்கும்போது இரத்த அழுத்தம் குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

வெஸ்டர்ன் கழிப்பறைகளில் இந்த அபாயம் அதிகம் காணப்படுகிறது.

குளிக்கும் போது கவனம்

குளிக்கத் தொடங்கும் போது முதலில் தலை மற்றும் தலைமுடியை ஈரப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நாம் குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் அது தவறு. இந்த நடவடிக்கை உடலின் வெப்ப நிலையை சரிசெய்ய உடலை கட்டாயப்படுத்துகிறது, திடீர் அழுத்தம் காரணமாக தமனிகள் உடைய நேர்ந்து மாரடைப்பு ஏற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்