எலும்பு வலுவடைந்து, மூளை நன்றாக செயல்பட இந்த காய் அதிக ஊட்டச்சத்து கொண்டதாம்!

Report Print Nalini in ஆரோக்கியம்
0Shares

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம்.

பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரை காயவைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்கு குளிர்ச்சியை தரவும், தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

எலும்புகள்

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

மூளை

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும்.

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.

புற்று நோய்

புற்று நோய் நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

கல்லீரல்

கல்லீரல் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்