இந்த நோய் இருப்பவர்கள் அன்னாசி சாப்பிடவே கூடாது... உயிரை பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். இதில் பல்வேறு ஊட்டசத்துக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன.

என்னத்தான் அன்னாசி நன்மைகள் நிறைந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. சிலருக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் அன்னாசியை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆபத்தை ஏற்படும்? யார் எல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

  • அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
  • அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.
  • பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.
  • அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
  • அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும்போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.
  • அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்