மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடம்புக்குள் என்னலாம் நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

இன்றைய சூழலில் பல மக்கள் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் மலச்சிக்கலால் அன்றாடம் அவதிப்பட்டு வருவதுண்டு.

நார்ச்சத்து குறைவாக உணவுகளைக் குறைத்து, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதால், குடலால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல், வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

இது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் தற்போது மலச்சிக்கலின் போது உடலுக்குள் என்ன எல்லாம் நடக்கிறது என்பதைப் தெரிந்து கொள்வோம்.

  • மலத்தை வெளியேற்ற அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் போது, மலம் வெளியேறும் வெளிப்புற தசை கழிக்கப்படலாம். இந்த தசை தான் குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த தசையில் வழக்கத்திற்கு அதிகமான அழுத்தம் தினசரி கொடுக்கப்படும் போது, அப்பகுதியில் வீக்கத்தை மட்டுமின்றி, இரத்தப்போக்கையும் ஏற்படுத்தக்கூடும்.

  • எப்போது ஒருவரால் சரியாக மலத்தை வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது சிறிது சாப்பிட்டாலும், அது எளிதில் வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும். குறிப்பாக நாள்பட்ட மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தான், இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பார்கள்.

  • ஒருவர் மலச்சிக்கலுடன், உடல் வறட்சியையும் கொண்டிருந்தால், அது அவர்களுக்கு தலை வலி, தலைச் சுற்றல் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுவது போன்றவற்றை சந்திக்க வழிவகுக்கும்.

  • மலம் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தத்தை வழக்கத்தை விட அதிகமாக கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள சிறிய இரத்த குழாயில் தொடர்ச்சியாக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, அந்த இரத்த நாளங்கள் வீக்கமடைய ஆரம்பித்து, மூல நோயை உண்டாக்கும்.

  • பெருங்குடலில் அதிகளவிலான மலம் சேரும் போது, அது சிறுநீர்ப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும்.

  • ஒருவரது குடலில் மலம் வழக்கத்தை விட அதிக நேரம் இருக்கிறதோ, அப்போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மலத்துடன் சேர்ந்து செயல்பட்டு வாய்வை உருவாக்கும். இப்படி உருவாகும் வாய்வு இறுக்கமடைந்த மலம் காரணமாக எளிதில் வெளியேற்ற முடியாமல், வயிற்று உப்புச பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்