உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை இதை பொருளை சாப்பிடுங்க!

Report Print Nalini in ஆரோக்கியம்
0Shares

ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி நமது நாட்டில் விளையும் வணிக தானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள்.

அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது.

பச்சைப்பட்டாணியில் கிட்டத்தட்ட 1300 இனங்கள் உள்ளது. பச்சைப் பட்டாணிக்கு ‘தோட்டப் பட்டாணி’ இனிப்பு பட்டாணி, இங்கிலீஸ் பட்டாணி என்றும் பெயர் உண்டு. எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்தது பச்சைப்பட்டாணி ஆகும். பச்சை பட்டாணி லேசான இனிப்பு சுவையினை உடையது. பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும்.

பச்சை பட்டாணியில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் நோய் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பச்சை பட்டாணியில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

இதயத்திற்கு

பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

மலச்சிக்கல்

பச்சை பட்டாணி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை எளிதாக வெளியேற்றுகின்றன.

கண்களுக்கு ஆரோக்கியம்

பச்சை பட்டாணி கண்களுக்கும் அதிசயங்களை செய்ய கூடியது. பட்டாணியில் கரோட்டினாய்டு நிறமி லுடின் ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண்புரை மற்றும் மாஸ்குலர் சிதைவு, பார்வை இழப்பு போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து குறைக்க செய்யும்.

​மூட்டு வலியை குறைக்க

பச்சை பட்டாணி கீல்வாதத்துடன் தொடர்பு கொண்ட மூட்டு வலி அழற்சியின் தீவிரத்தை தடுக்க செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே ஆனது எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதும் தடுக்கப்படுகிறது.

அல்சைமர் நோய்

வயதாகும் நபர்களில் சிலருக்கு மூளை செல்கள் மிகவும் வலுவிழப்பதால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரித்து அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்