உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களிடமிருந்து பாதுகாக்கும் பாகற்காயின் நன்மைகள்!

Report Print Nalini in ஆரோக்கியம்
0Shares

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால் இவ்வியாதியில் இருந்து விடுபடலாம்.

பாகற்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான் நல்லது. கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல், சிறுவயது முதலே சாப்பிட குழந்தைகளைப் பழக்கி வர வேண்டும். அப்போது தான் கசப்பும் சுவையின் ஒரு அங்கம் என்பதை இயல்பாகவே அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலமாகும். ஏனெனில் தங்கள் செயல்பாடுகள் முதல் சாப்பிடும் உணவுவரை அனைத்தையும் தனக்கு மட்டுமின்றி தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு பெண்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவுகளில் பெண்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

பாகற்காய் ஆரோக்கியமான பொருள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் கர்ப்பகாலத்தில் அதனை சாப்பிடலாமா என்றால் அது கேள்விக்குரிய ஒன்றுதான். மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பெண்கள் கர்ப்பகாலத்தில் தாராளமாக பாகற்காய் சாப்பிடலாம்.

பொடுகுப் பிரச்னை

பாகற்காயின் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும்.

சுவாசக் கோளாறுகள்

பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.

கல்லீரல்

தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

கண் பிரச்சினை

பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

தழும்புகள் மறையும்

பாகற்காயையோ அதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள தொற்றுகள், பருக்கள், தழும்புகள் வேகமாக மறையும்

விஷம் முறியும்

இலை சாற்றினைக் குடித்து வாந்தி எடுத்தால் பாம்பு(கண்ணாடி விரியன்) விஷம் கூட நீங்கும்.

அதிக நார்ச்சத்துகள்

பாகற்காயில் அதிகளவு நார்ச்சத்து நிரம்பியுள்ளது இது உங்களுக்கு திருப்தியான உணர்வை அளிக்கும். இது அதிக கலோரி உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் மீதான உங்கள் ஆர்வத்தை குறைக்கிறது. இது உங்களை கர்ப்பகாலத்திலும் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்