24 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன வேறுபாடுகள் உண்டாகும் நடக்கும் தெரியுமா?

Report Print Raju Raju in ஆரோக்கியம்
0Shares

மனிதர்கள் உயிர் வாழ உணவு என்பது அவசியம்.

சிலர் உடல் எடையை குறைக்க சரியாக சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார்கள்,

மேலும் சிலர் விரதம் போன்ற விடயங்களுக்காக உணவுகளை மணிக்கணக்கில் தவிர்ப்பார்கள்.

சரி, 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிக பட்சமாக எத்தகைய வேறுபாடுகள் உடலில் உண்டாகும் என்பதை காண்போம்

முதல் 8 நேரம்

முதல் 8 மணி நேரம் வரை, கடைசியாக நாம் சாப்பிட்ட உணவை வயிறு செரிமானிக்கும். அதே போல இரத்தமும் சீராக தனது வேலைகளை செய்யும்.

அடுத்த 8 மணி நேரம்

இதுவரை நீங்கள் விரதமே இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு அடுத்த 8 மணி நேரத்திற்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். எதையாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி விடும்.

பலருக்கும் இந்த சந்தேகம் இருக்க தான் செய்யும். அதாவது, இது போல 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமா? குறையாதா? உண்மை என்னவெனில், இவ்வாறு இவ்வாறு செய்வதால் உடலில் கலோரிகள் குறையும்.

நச்சுக்கள்

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இந்த 1 நாள் விரதத்திற்கு உண்டு. ஒரு முழு நாள் எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இது வரை சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும்.

இதயம்

24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது. மேலும், சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.

மேலும், ஆரோக்கியமுடன் இருக்க ஒரு மாதத்திற்கு 1 முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை, இது போல 24 மணி நேரமும் சாப்பிடாமல் இருங்கள்.

24 மணி நேரம் முழுவதும் நீங்கள் எந்தவித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தாலும் அவ்வப்போது தண்ணீர் குடித்து வரலாம்.

அதே நேரத்தில் சர்க்கரை நோய்கள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் இந்த விடயத்தை மேற்கொள்ள வேண்டாம்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்