உடல் எடையை இருமடங்கு வேகத்தில் குறைக்கும் அற்புத டீ.. ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது!

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

உடல் எடையை குறைக்க பல இயற்கை மருத்துவ பொருட்கள் உதவியாக இருக்கின்றது. அதில் கிராம்பும் ஒன்று.

கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிகரித்த உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இதில் இதில் டீ போட்டு குடித்தால் இன்னும் பல நன்மைகளை தருகின்றது. அந்தவகையில் இந்த அற்புத டீயை எப்படி தயாரிக்கலாம்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • தண்ணீர் - 2 கப்
 • கிராம்பு - 4-5
 • பட்டை - 1/2 இன்ச்
 • இஞ்சி - 1/2 இன்ச்
 • வெல்லம் - சுவைக்கேற்ப
 • எலுமிச்சை - 1/2
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கவும்.

பின்பு அதில் கிராம்பு, பட்டை சேர்த்து, இஞ்சியையும் தட்டிப் போட்டு மூடி வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு அந்த நீரை வடிகட்டி, அதில் ஒரு டீபூன் தேன் மற்றும் ஒரு டேபிள் பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கிராம்பு டீ தயார்.

நன்மைகள்
 • கிராம்பு டீ ஒருவரது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பில் உள்ள உட்பொருட்கள், செரிமான செயல்முறையை ஊக்குவிக்கிறது. ஒருவரது உடலில் செரிமானம் சிறப்பாக நடந்தால், அது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உதவும்.
 • கிராம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகளும் உள்ளன. எனவே இவை சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. அதோடு, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
 • கிராம்பு டீ நெஞ்சு நெரிசலுக்கும், சைனஸிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும். இதில் யூஜெனோல் இருப்பதால், இது நெஞ்சில் உள்ள சளியை வெளியேற்றி நிவாரணத்தை அளிக்கும்.
 • கிராம்பு டீ குடித்தால், அது வாயில் இருந்து பாக்டீரியாக்களை நீக்க உதவி புரிந்து, பல் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும்.
கிராம்பு டீயின் பக்க விளைவுகள்
 • அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது தான் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. கிராம்பு டீயை ஒருவர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நல்லது.
 • இதற்கு மேல் குடிக்கும் போது, இரைப்பைக் குடலில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, தசை வலி மற்றும் சோர்வை சந்திக்கக்கூடும்.
 • கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கிராம்பு டீயைக் குடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக குடித்தால், அது குழந்தைக்கு தீங்கை விளைவிக்கும்.
யாரெல்லாம் கிராம்பு டீ குடிக்கக்கூடாது?
 • கிராம்பு டீ குடித்த பின் வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை சந்திப்பவர்கள், அந்த டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • ஒருவேளை மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் அல்லது குளிர் போன்றவற்றை சந்திப்பவர்கள், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்