வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
0Shares

வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் நம்பமுடியாத பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்

வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் கட்டுப்படுத்தும். இதோடு நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணமாகும்.

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் வலி குறையும்.

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வெங்காயம் உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்