வரலாற்றில் ஒகஸ்ட் 22!

Report Print Nivetha in வரலாறு
47Shares
47Shares
ibctamil.com

நிகழ்வுகள்

1639

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.

1642

இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1717

ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர்.

1770

ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான்.

1780

கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).

1798

ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர்.

1831

வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

1848

நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1860

பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.

1864

12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

1875

சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

1910

கொரியா-ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911

பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1914

முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர்.

1926

தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1932

தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

1941

இரண்டாம் உலகப் போர்: ஜேர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1942

இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது.

1944

இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது.

1949

கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1962

பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1972

ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978

சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1989

நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

1991

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments