முறைத்து பார்த்த ஆலமரம்: 118 வருடங்கள் சிறைவைத்த இராணுவ அதிகாரி

Report Print Deepthi Deepthi in வரலாறு

உலகில் விசித்திர சம்பவங்கள் நடைபெறுவதற்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது. இப்படி நடைபெறும் விசித்திர சம்பவங்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.

அப்படி ஒரு விசித்திர சம்பவம் தான் பாகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் இப்போது அல்ல, இது நடைபெற்று 118 வருடங்கள் ஆகிவிட்டது.

பாகிஸ்தான் நாட்டின் லண்டி கோட்டல் மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாமில் ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் சுமார் 118 ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்டு 118 ஆண்டுகள் கடந்துவிட்ட காரணத்தால் இதனை அந்நாட்டு அரசு சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது.

ஆனால் இந்த மரத்தினை பார்க்கவரும் சுற்றுலாவாசிகள் எதற்காக இந்த மரம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை கேட்டு சிரிக்கத்தான் செய்வார்கள்.

என்ன காரணம்?

118 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர், குடிபோதையில் இருந்தபோது, இந்த ஆலமரம் என்னை நோக்கி வருகிறது என கோபம் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக, சங்கிலியால் இந்த ஆலமரத்தை சிறைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அன்று சிறைபிடிக்கப்பட்ட இந்த ஆலமரம் 118 வருடங்கள் ஆகியும் விடுவிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்று வரை அந்த மரத்திற்கு விடுதலை கிடைக்கவில்லை.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments