5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

Report Print Raju Raju in வரலாறு

தென் அமெரிக்க நாடான பெருவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகெங்கிலும் மறைந்திருக்கும் பல வரலாற்று உண்மைகள் மற்றும் விடயங்கள் பலரால் கண்டுப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அந்த வரிசையில் தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஆய்வின் முடிவில், செவ்வக வடிவில் நுழைவு வாயிலை கொண்டுள்ள 5000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவிலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிறிஸ்து பிறப்பிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மிகவும் நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த கோவிலில் 8 மீட்டர் அளவிலான பிரமிடு இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers