மலை போல் குவிந்திருக்கும் புதையல்கள்: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in வரலாறு

புதையல் இருக்கும் இடங்களிலெல்லாம் மரணத்திற்கான அழிவுப்பாதையும் இருக்கும் என்பது முற்கால நம்பிக்கை. உயிரை துச்சமென நினைத்து சென்றால் மட்டுமே இந்த புதையல்கள் கிடைக்குமாம்.

அந்த வகையில் வரலாற்றிலேயே இதுவரை கண்டிபிடிக்காத புதையல்கள் மறைந்துள்ள இடங்களை பற்றி பார்ப்போம்.

புதையல்கள் குவிந்திருக்கும் இடங்கள் எங்குள்ளது?
மூகாம்பிகை கோவில்

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் கொல்லூர் அருகே மூகாம்பிகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வருமானம் 17 கோடி ரூபாய் ஆகும்.

இந்த கோயிலில் விலைமதிக்க முடியாத புதையல்கள் இருப்பதாக அங்குள்ள சாமியார்கள் கூறுகின்றனர்.

மூகாம்பிகை கோயிலின் ஒரு புறத்தில் உள்ள குறியீடு புதையல் இருப்பதைக் குறிக்கிறது என்றும் அந்த புதையல் வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதாக முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மூகாம்பிகை சிலை மற்றும் அங்குள்ள புதையல்களின் மொத்த மதிப்பும் 100 கோடியைத் தாண்டும் என்கின்றனர்.

இந்த கோயிலின் மூகாம்பிகை சிலையின் முகம் முழுவதும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது. அதை விஜயநகர பேரரசர் வழங்கியதாக வரலாறு கூறுகிறது.

கிருஷ்ணா ஆறு

உலகின் தலைசிறந்த வகை வைரக்கற்கள் அடங்கிய புதையல் ஒன்று கிருஷ்ணா நதியின் கிளையாற்றில் இருக்கிறது. அதை கோல்கொண்டா பேரரசு கொண்டிருந்ததாக கூறப்படுவது உண்டு.

இந்த கிருஷ்ணா ஆற்றில் எடுக்கப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற கோகினூர் வைரம் கூட அங்குதான் இருக்கிறதாம். எனவே இந்த ஆற்றின் அடியில் மிகப்பெரிய வைரப் பாறை இருக்கலாம் என கருதப்படுகிறது.

சார்மினார் சுரங்கம்

ஹைதராபாத்தில் கோல்கொண்டா கோட்டையையும் சார்மினாரையும் இணைக்கும் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று இருப்பதாகவும், அது தற்போது மாயமாகிவிட்டதாகவும் தெரிகிறது.

அந்த சுரங்கத்தில் சில மறைக்கப்பட்ட புதையல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுரங்கம் எங்கு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், புதையலை எடுக்க அங்கே செல்லமுடியாது என்று கூறுகின்றார்கள்.

மேலும் அந்த சுரங்கத்தில் 100 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக இன்றளவும் நம்பப்படுகிறது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments