எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in வரலாறு

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் எனும் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 1000-2000 வருடங்களுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட மிகவுக் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடந்த போது வந்த நஞ்சை சிவன் உண்டார். அந்த நஞ்சின் விஷத்தன்மையை குறைக்கவே இந்த கோவிலில் நல்லெண்ணெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அதுவும் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய்யை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது ஒரு ஐதீகமாக இருந்து வருகிறது.

நீலகண்டேஸ்வரர் கோவிலின் சிறப்பு என்ன?

நீலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவருக்கு குடம் குடமாக எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் அவை அனைத்தும் சிவலிங்கத்திற்கு உள்ளயே உறிஞ்சப்படுவது மிகவும் அதிசமான ஒரு நிகழ்வாக உள்ளது.

இந்த லிங்கத்திற்கு ஒரு நாள் முழுவதும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் கூட அவை அனத்தும் அந்த லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுமாம்.

அதுவும் அபிஷேகம் செய்த அடுத்த நாள் பர்க்கும் போது அந்த சிவலிங்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம் எண்ணெய் ஊற்றாமல் இருந்ததை போன்று நன்கு உலர்ந்து காய்ந்து சொரசொரப்பு தன்மையாக காணப்படுமாம்.

ஆனால் இந்த சிவலிங்கத்தில் ஊற்றப்படும் எண்ணெய் எங்கு செல்கிறது, எப்படி மாயமாகிறது என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லையாம்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்