அறியப்படாத ஆதிதமிழனின் மற்றொரு அடையாளம்

Report Print Gokulan Gokulan in வரலாறு

தாமதமானாலும் தாமிரபரணி தண்ணீரில் தான் தாகம் தீர்த்துகொள்ள வேண்டும் என அண்டைகால மனிதனின் வார்த்தைக்கேற்ப இன்றும் தாமிரபரணி ஆத்து தண்ணீர் பற்றி பேசாமல் யாருமில்லை. அப்படிபட்ட இதன் தொடர்ச்சியின் காரணிகளை பற்றி இப்பதிவில் காணப்போகிறோம்.

மேற்கில் பொதிகை மலையில் உருவாகி, பாபநாசம் வழி வந்து, புன்னக்காயலில் கரை சேரும் இந்நதிக்கரையில் நிறைய சுற்றுலாத் தளங்களும் உள்ளனவாகும்.

இவ்வாரே கடலில் கலக்கிறது !!!

அம்பை, கல்லிடைக்குறிச்சி வழி பாய்ந்து, சேரன்மாதேவி வழி சிறுவோடையாக மாறி நிற்கிறது.

முக்கூடல் வழியாகப் பாயும் பெருநதி திருநெல்வேலி நகரத்தை அடைந்து, சீவலப்பேரி அருகே இரண்டாக பிரிந்து கங்கை கொண்டான் வழி ஒன்றும், முரப்பநாடு, திருவைகுண்டம் வழி மற்ற பிரிவும் ஓடுகிறது. முக்காணி அருகே பலவாறாக சிதறி ஓடும் நதி இறுதியில் கடலில் கலக்கிறது.

சுற்றலாதளங்களை இழக்க நேரிடுமா???

தாமிரபரணி தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கிறது. இதனால்தானோ என்னவோ அக்கறையில்லாமல் கிட்டத்தட்ட 70 சதவிகித தாமிரபரணியை இழந்துவிட்டோம். இதனால் நாம் இழக்கப்போவது பல சுற்றுலாத் தளங்களையும்தான்.

நதி நம்மை வந்தடையும் கதை இதோ:

தாமிரபரணி நதி, திருநெல்வேளியின் மேற்கே பாபநாசத்தின் மேலே இருக்கும் பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. இந்த மலை மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களுள் ஒன்றாகும்.

பல சிற்றாறுகளுடன் இணைந்து திருநெல்வேலி, திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக கிட்டத்தட்ட 125கிமீ தூரம் ஓடி, திருச்செந்தூருக்கு அருகிலுள்ள புன்னக்காயல் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.

தென்மேற்கு பருவமழையிலும் சரி பொதிகை மலையில் விழும் நீர் ஓடோடி வந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் பலபகுதிகளை வளமாக்குகிறது.

தீர்கதரசியாக விளங்கும் தீர்த்தத்தின் மகத்துவம் பற்றி

பாணதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் தீர்த்தமென்று முக்கிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் வழியாக இந்த ஆறு வந்தடைகிறது.

அகத்தியருக்கு சிவபெருமான் தனது கல்யாண தரிசனத்தை பொதிகை மலையில் தந்ததால் கல்யாண தீர்த்தம் என்றும், மகாபாரதத்தில் தாமிரபரணியின் இணையாறு சிற்றாறுதான் என்றும் அது குற்றாலத்தில் அருவியாக விழுகிறது.

தாமிரபரணிக்கு ஈடாக அதாவது இணையாக பொதிகைமலையில் உருவாகும் மற்றொரு நதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Archaeological survey of india நடத்திய ஆய்வின் படி ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பழமையான வரலாற்று பொருட்கள், இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதையும் ஆதிதமிழர்கள் இந்த நதிக்கரையில்தான் வாழ்ந்திருக்கின்றனர்.

குமரி கண்டம் கடலுக்குள் சென்றபிறகு வாழ்ந்தவர்களின் பகுதி திருநெல்வேலியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று இந்த ஆய்வில் கருதப்படுகிறது.

சுற்றுலா அம்சங்களாக விளங்கும் காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு என இந்த ஆறுகள் ஒவ்வொன்றும் சிறப்புவாய்ந்தவை.

மேலும் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குபவை. களக்காடு முண்டந்துறை காடுகளில் உற்பத்தியாகி, ஓடி கடலில் அல்லது தாமிரபரணி நதியில் கலக்கின்றன.

காரையாறு அணையிலும், சேர்வலாறு பாபநாசம் சரணாலயத்திலும் சென்று முடிவடைகிறது. மேலும் புலிகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக இருப்பதால் 895 சகிமீ பரப்பளவுடைய இப்பகுதியில் வனத்துறையினரின் பாதுகாப்புடன், அனுமதியுடன் டிரெக்கிங் செய்ய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் இந்த மணிமுத்தாறு கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக பாய்ந்து தாமிரபரணி ஆற்றில் கடக்கிறது. மேலும் இதன் இன்னொரு பகுதி கோதையாறாக குமரி மாவட்டத்தின் வழியே ஓடி அரபிக்கடலில் கலக்கிறது.

நீரின் குரலாக விளங்கும் குற்றாலத்தில் அருவிகள் என்பன மொத்தம் ஒன்பது. அவை பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழையகுற்றாலம், பாலருவி ஆகியனவாகும்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers