காலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அதிசயங்கள்! வியக்க வைக்கும் விந்தைகள்

Report Print Kavitha in வரலாறு
பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினத்தின் பெருமை காலத்திற்கும் ஓங்கி நிற்கும் அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் தமிழர்கள்.

அவ்வாறு தமிழனின் பெருமைகாக்கும் மகத்தான விடயங்கள் தொடர்பில் சற்றே ஒரு பார்வை....,

ஒசோன் படலம்

ஓசோன் 20 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட படலம், 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஓசோன் படலத்தின் படலத்தின் படம் முக்கியத்துவம் அதை எவ்வாறு அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்தும் அதில் அடங்கியுள்ளது.

இசைத் தூண்

தமிழ்நாட்டில் உள்ள நெல்லையப்பர் கல் தூண்களை தட்டினால் "ச ரி க ம ப த நி" என்ற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் குறிக்கின்றது, கல்லுக்குள் ஏழு ஸ்வரங்களை ஒழிப்தும் அதிசயமே.

வடுக நாத பைரவர் கோயில்

திருப்பூர் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, எந்த மாதத்தில் எந்த வடித்தில் எந்த விதத்தில் இருக்கும் என்பதை குண்டடம் வடுக நாத பைரவர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்களே நம் முன்னோர்கள்.

5000 ஆண்டுகள் பழமை சிலை

வடசென்னையின் வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோயில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது வந்து விழும், இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

யாளி

யாளி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோயிலில் இருக்கும். இந்த சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும், அந்த உருண்டையை நாம் உருட்டலாம், ஆனால் ஆயிரம் போர் சேர்ந்தாலும் அதை உருவ முடியாது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அக்கோயில் உள்ள கிணற்றிற்கு பக்கத்தில் சிங்க சிற்பம் ஒன்றும் அதன் வாயிலில் கதவு ஒன்றும் உள்ளது.

அன்றைய ராணிகளுக்காகவே இந்த கிணறு கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அக்கோயிலில் உள்ள சுவர்களில் கூட மரகதகற்கள் பதித்துள்ளனர். இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில்

1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணையை கட்டிய வித்தையையும், இன்று வரை யாராலும் அசைக்க முடியாததும் காலத்தில் அழியாத அதிசயங்களாக இன்றும் திகழ்கின்றது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்