இந்தவொரு திகதியில் மட்டும் சிவன் மீது சூரியக் கதிர்கள் விழுமாம்!

Report Print Printha in வரலாறு

தமிழ்நாட்டின் 1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் அருந்தவ நாயகியுடன் அழகாக வீற்றிருக்கும் வடமூலநாதர் எனும் ஆலந்துறையார் கோவில் உள்ளது.

அரியலூரில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலின் விருட்சமாக ஆலமரம் ஒன்று அமைந்துள்ளது, மேலும் பிரம்ம மற்றும் பரசுராம தீர்த்தங்களும் இருக்கின்றது.

இந்த கோவிலின் முக்கிய திருவிழாவாக பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறந்து இரவு 8.30 மணிக்கு மூடப்படுகிறது.

இக்கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

இங்கு வந்து வழிபட்டால் வெகுசீக்கிரமே பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

பொதுவாக இந்த கோவிலில் பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதுவே இங்குள்ள நேர்த்திக்கடனாகவும் உள்ளது.

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால் உலகம் இயங்காமல் நின்று விட்டதாம்.

இதனால் முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றார்களாம். விளையாட்டாக செய்தாலும் அது பார்வதி தேவியே என்றாலும், அதுவும் பாவத்துக்கு நிகரானதே என்று கூறி விட்டாராம் சிவன்.

இதனால் நீ பூலோகம் சென்று அங்குள்ள யோகவனத்தில் தங்கி தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதாக புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது.

பங்குனி மாதம் 18-ம் திகதி அன்று மட்டும் சூரியன் தன் கதிர்களால் இக்கோவிலில் உள்ள இறைவனை தொடுகின்றதாம்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers