கோடையை கூலாக்க சூப்பர் டிப்ஸ்

Report Print Fathima Fathima in வீடு - தோட்டம்
கோடையை கூலாக்க சூப்பர் டிப்ஸ்
173Shares
173Shares
lankasrimarket.com

கோடை வெயில் கொளுத்துவதால் வீட்டுக்குள் இருக்கும் போது அதன் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது.

எனவே கோடை காலத்தில் வீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்துவன் மூலம் கூலாக வைத்துக் கொள்ளலாம்.

  • வீட்டுக்குள் காற்றுவர வேண்டும் என்பதற்காக பகல் நேரத்தில் ஜன்னலை திறந்து வைக்ககூடாது, இதனால் அனல் காற்று தான் அதிகம் வீசும், எனவே வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். ஆனால் மாலை, இரவு நேரங்களில் ஜன்னலை திறந்து வைக்கலாம்.
  • பகல் நேரத்தில் தேவையில்லாமல் லைட் போடுவதை தவிர்க்கவும், இதனால் வெப்பம் அதிகரிக்கும்.
  • சமையலறை மற்றும் படுக்கை அறையில் காற்றை வெளியேற்றும் விசிறியை வைத்துக் கொள்ளலாம், இதனால் அனல் காற்று வெளியேறி குளிர்ச்சியாக இருக்கும்.
  • வீட்டையும் காலை, மாலை என இருநேரங்களிலும் துடைப்பது சிறந்தது.
  • வீட்டில் இருக்கும் மின்விசிறியை Counter-Clockwise சுற்றும்படி வைத்தாலும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments