அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க.. இதனை சுத்தம் செய்யுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்

அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு மோசமான சுகாதாரமும், சுற்றுச்சூழலும் தான் முக்கிய காரணம்.

அதிலும் குறிப்பாக நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களில் கிருமிகள் மற்றும் தூசிகள் ஏராளமான அளவில் தேங்கியிருக்கும்.

எனவே வீடு மற்றும் வீட்டில் உள்ள சில பொருட்களை வாரம் 2 முறைகள் சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

வீட்டில் உள்ள எந்த பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்?
  • வீட்டில் சமையலறையில் உள்ள துணியில் ஏராளமான கிருமிகள் தேங்கியிருக்கும். ஏனெனில் அது எப்போதும் ஈரமாக இருப்பதால், அதில் கிருமிகளும் அதிகமாக இருக்கும். எனவே அடிக்கடி சமையலறை துணிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  • பாத்ரூம் அருகே இருக்கும் மேட் எப்போதும் ஈரமாக இருப்பதால், அதில் பூஞ்சைகள் வளரும். எனவே பாத்ரூம் மேட்டை அன்றாடம் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டியது அவசியம்.
  • ஜன்னலில் போடப்படும் திரைச்சீலைகள் பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் அதை வாரத்திற்கு ஒருமுறை துவைக்க வேண்டும். இல்லையெனில் அது அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
  • வீட்டில் உள்ள சோபாவை தினமும் ஒரு துணியை வைத்து துடைத்து, வேக்யூம் க்ளீனர் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் ஷோபாவில் உள்ள தூசிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சுத்தமாக இருக்கும்.
  • வாசலில் போடும் மேட்டில் அதிக தூசிகள் இருக்கும். எனவே இதை அடிக்கடி துவைத்து, வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்தால் சளி, காய்ச்சலை தடுக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments