படுக்கையறைக்கு எந்த வண்ணம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்?

Report Print Printha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறைக்கு எந்த மாதிரியான வண்ணங்கள் சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

படுக்கையறைக்கு எந்த வண்ணம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்?

  • மஞ்சள் நிறமானது ஆற்றல், பொறுமை மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த சக்தி வாய்ந்த மஞ்சள் நிறத்தை படிக்கும் அறை மற்றும் குழந்தைகள் இருக்கும் அறைகளுக்கு பயன்படுத்தலாம்.

  • பழுப்பு நிறமானது நல்லிணக்கம் மற்றும் காதலை வெளிப்படுத்துகிறது. இந்த நிறத்தை படுக்கை அறைக்கு பயன்படுத்தினால் தனிப்பட்ட வாழ்வில் அற்புதங்களும், உறக்கத்தில் நேர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

  • நீல நிறமானது அமைதி, மேன்மை மற்றும் உயர்வை அளிக்கக் கூடியது. எனவே இந்த நீல நிறத்தினை படுக்கை அறைக்கு பயன்படுத்தினால், அது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கச் செய்யும்.

  • பச்சை நிறமானது நம்பிக்கை மற்றும் கருவளத்தின் மாற்றத்தைக் குறிக்கிறது. எனவே இது தம்பதிகளின் ஈர்ப்பு மற்றும் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்து, மன அமைதியை அளிக்க உதவுகிறது.

  • ஆரஞ்சு நிறமானது அழகு, சக்தி, சௌகரியம் மற்றும் உறுதியைக் குறிக்கிறது. இதை படுக்கை அறையில் பயன்படுத்தினால், தம்பதிகளிடம் மகிழ்ச்சி மற்றும் காதல் அதிகரிக்கும்.

  • பிங்க் நிறமானது அமைதி, சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த பிஞ்க் வண்ணம் காதலின் நிறமாகக் கருதப்படுகிறது.

  • வெள்ளை நிறமானது பேரமைதியை குறிக்கிறது. எனவே வெள்ளை நிறத்தை படுக்கை அறைக்கு பயன்படுத்தினால், அது தெளிவு மற்றும் கவனத்தை அதிகரிக்க செய்து, உறக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

குறிப்பு

சிவப்பு நிறமானது தைரியம் மற்றும் பேரார்வத்தைக் குறிக்கிறது. இது பல ஆபத்தான உணர்வுகளை தூண்டும் என்பதால் இந்த சிவப்பு நிறத்தை படுக்கை அறையில் பயன்படுத்தக் கூடாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments