வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி?

Report Print Printha in வீடு - தோட்டம்

தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல்களை, நம் வீட்டில் இருந்து வெளியேற்றவும், வீட்டினுள் நுழைவதை தடுக்கவும் சில வழிகள் இதோ,

  • வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை நன்கு திறந்து, எப்போதும் வீட்டை வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். இதனால் வரும் காற்றோட்டம் மற்றும் வெயில் எதிர்மறை ஆற்றல்களை தடுத்துவிடும்.
  • வீட்டில் ஏதேனும் தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறை ஆற்றல்களை காந்தம் போல ஈர்த்துவிடும்.
  • வீட்டினுள் காலணிகள் போடாமல் வெறும் கால்களோடு நடக்கும் போது, நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடலின் ஆற்றல் சமநிலையில் இருக்கும்.
  • காலணிகளை வெளியே விட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது, கால்களை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு செல்ல வேண்டும். இதனால் வெளியே உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் நுழையாது.
  • நம் வீட்டு தோட்டத்தில் தினமும் நடைபயிற்சி செய்வது நல்லது. இதனால் நேர்மறை ஆற்றல்களை ஊக்கமளித்து, அது நமக்கு புத்துணர்வை அளிக்கும்.
  • வீட்டின் தரையை பெருக்கும் போது, அந்த குப்பைகளை வெளியில் போட்டு விட வேண்டும். இதனால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அந்த குப்பையோடு போய்விடும்.
  • கல் உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் சக்தி உள்ளது. எனவே வீட்டை துடைத்து கழுவும் போது, ஒரு கையளவு கல் உப்பு கலந்த நீரை பயன்படுத்த வேண்டும்.
  • நம் வீட்டை சுற்றிலும் தொட்டிகல்ளை அமைத்து, அதில் செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வந்தால், அது எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும்.
  • கல் உப்பு கரைத்த நீரில் குளத்தல் அல்லது கை கால்களை அடிக்கடி சிறிது நேரம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்தால், நம் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் போய்விடும்.
  • வீட்டில் தினமும் பிரார்த்தனைகள் செய்வதுடன், நம் மனதில் நல்ல எண்ணம், செயல், பேச்சு என்று அனைத்தும் நேர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்காது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments