கொசுக்களின் தொல்லைகளை விரட்டும் அற்புத வழி

Report Print Printha in வீடு - தோட்டம்

கொசுக்கடியினால் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சலின் பாதிப்புகள் ஏற்படும்.

இத்தகைய பிரச்சனைகளை தடுக்க, இயற்கையில் உள்ள ஒரு அற்புத வழி இதோ!

கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்?

தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு வேப்ப எண்ணெய்யை கலந்து சருமத்தில் தேய்த்துக் கொண்டால், கொசுக்கள் கடிக்காது.

ஏனெனில் வேம்பின் இயற்கையான நறுமணம் கொசுக்களை தடுத்து விடும். வேம்பு எண்ணெய்யை பயன்படுத்துவதால், சருமத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

இந்த முறையை குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம். இதனால் எந்தவொரு பாதிப்புகளும் குழந்தைகளுக்கு ஏற்படாது. ஆனால் அரிப்புகள் ஏற்படுகிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்களை அழிக்க மற்ற வழிகள்?
  • நீம் ஆயில் டிஃயூசரில் (neem oil diffuser) சில துளிகள் வேப்ப எண்ணெய்யில் கலந்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டாலே போதும். கொசுக்களின் தொல்லைகள் இருக்காது.
  • காய்ந்த வேப்பிலையை தீயில் போட்டு வீட்டை சுற்றி புகை போட்டாலும், கொசுக்களின் தொல்லைகள் வராது.
  • கொசுக்களை விரட்டும் பூண்டு, சாமந்தி போன்ற செடிகளை நம் வீட்டின் முன் வளர்த்து வந்தால், கொசுக்கள் வருவதை தடுக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments