பணப்பிரச்சனையை போக்க இதை செய்திடுங்கள்: பலன் கிடைப்பது நிச்சயம்

Report Print Printha in வீடு - தோட்டம்

நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் ஏற்பட்டால், அதற்கு சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம்.

பணக்கஷ்டத்தை போக்க தினமும் பின்பற்ற வேண்டியவை?
 • அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் முகத்தை பார்க்க வேண்டும்.
 • காலை கடன்களை முடித்து குளித்து முடித்து விட்டு, முதலில் முகத்தை துடைக்காமல், முதுகுப் பகுதியை துணியால் துடைக்க வேண்டும்.
 • உடலை தூட்மை படுத்திய பின் ஈரமான துண்டு அல்லது வேஷ்டியை உடுத்திக் கொண்டு பூஜை அறைக்குள் சென்று, கடவுளை வணங்க வேண்டும்.
 • பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். அதுவும் அன்கு பயன்படுத்தும் பல்ப் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.
 • சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்பு உடையதால், அதை நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இதனால் நம வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.
 • தினமும் காலையில் பூஜை செய்து முடித்த பின் காகத்திற்கு உணவை வைத்து விட்டு, காலை உணவை சாப்பிட வேண்டும்.
 • சாப்பிடும் உணவின் பாத்திரத்தை தட்டு என்று கூறாமல், வட்டு என்று கூற வேண்டும். ஏனெனில் தட்டு என்பது தட்டுபாட்டுக்கு உரியது. மேலும் நம் இடது கை சாப்பிடும் போது, வட்டிலை தொட்டு கொண்டு இருக்க வேண்டும்.
 • வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் மின்விசிறி, விளக்குகள், தண்ணீர் குழாய் போன்ற அனைத்தையும் சரியாக கவனித்து விட்ட செல்ல வேண்டும்.
 • நம் வீட்டில் படுக்கை அறை தான் செல்வத்தை அதிகரிக்கும். எனவே எப்போதும் படுக்கை அறையை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
 • பணம் வைக்கும் அலமாரி, பீரோ ஆகியவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கி அமைக்க வேண்டும்.
 • படுக்கை அறையில் கட்டில் கால்கள், அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமையாடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சேதமடைந்த மரப் பொருட்கள் வீட்டில் எதிமறை சக்தியை ஈர்க்கும்.
 • தினமும் மாலையில் சந்தியா நேரத்தில் நம் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். அல்லது அந்த நேரத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கூட வரலாம்.
 • இரவு உணவை சரியான நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதுவும் இரவு உணவின் போது, தயிரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இதனால் வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் போய்விடும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments