கம்பளிப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட இதை செய்யுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்

கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால் சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். இதன் தொல்லையை போக்க சில எளிய டிப்ஸ்கள் இதோ,

  • கம்பளிப்பூச்சியை அழிக்க அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்துவிடும்.
  • கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்.
  • பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தாலே கம்பளிப்பூச்சிகள் இறந்துவிடும்.
  • வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தாலே கம்பளிப்பூச்சிகள் வருவதை தடுக்கலாம்.
  • மிளகை பொடி செய்து, அதை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மீது தெளித்தால், அது கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை எளிதில் தடுக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers